உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா வைத்த குறி தப்பவில்லை : 3 தங்கம் வென்று அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 7:11 pm
India Won 3 Gold - Updatenews360
Quick Share

பிரான்ஸ் : பாரீஸில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக கோப்பை வில்வித்தை போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘காம்பவுண்ட்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்கேப்பை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் முடிவில் அபிஷேக் வர்மா 10-9 என்ற புள்ளி கணக்கில் கிரிஸ் ஸ்கேப்பை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில்,இன்று நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை கலப்பு இரட்டையர் அணிப் போட்டியில் நட்சத்திர ஜோடிகளான அதானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் நெதர்லாந்தின் ஸ்ஜெஃப் வான் டென் பெர்க் மற்றும் கேப்ரியெலா ஸ்க்லோசர் ஆகியோரை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி 2 தங்கப் பதக்கத்தைப் பெற்றனர்.

இதன் மூலம் இந்தியா இதுவரை மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை வில் வித்தை போட்டியில் மட்டும் 3 பதக்கங்களை வென்று இந்திய அணி பெருமை சேர்த்து வருகிறது.

Views: - 468

0

0