பிறந்தநாளன்று கோலிக்கு அடித்த அதிர்ஷ்டம்… இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Author: kavin kumar
5 November 2021, 11:02 pm
Quick Share

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இந்தியா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இந்திய அணியின் துல்லிய பந்து வீச்சாள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸ்காட்லந்து அணி 17.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் எடுத்தது. இந்தியா அணி சார்பில் ஜடேஜா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ரோகித் மற்றும் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 30 ரன்களை சேர்த்து அவுட்டானார். ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார். பவர் பிளேயில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்தது. வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் சூர்யகுமார் யாதவ். 6.3 ஓவர்களில் இந்தியா 89 ரன்களை குவித்தது. இந்தியா இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இருந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி மற்றும் தோல்வியை பொறுத்தே அது அமையும்.

Views: - 854

0

0