பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்கள்…துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய மங்கை!!

Author: Aarthi Sivakumar
30 August 2021, 10:16 am
Quick Share

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்களை பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

டோக்யோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை இந்தியா மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும்.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் இவர் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார் 19 வயதாகும் அவனி லெகரா. இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியா இன்று மேலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான F56 வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இன்று நடந்த இறுதிப்போட்டியில் 24 வயதாகும் யோகேஷ் 44.38 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சுந்தர் சிங். இன்று நடந்த இறுதிப்போட்டியில் 64.01 மீட்டர் வீசி அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் கிளாஸ் F45 பிரிவில் பங்கேற்ற இந்திய தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்.

Views: - 532

0

0