அச்சு அசல் அனில் கும்ளேவாகவே மாறிய அசுர வேக பும்ரா!

30 January 2021, 10:28 pm
Bumrah - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ளேவைப் போல இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காப்பியடித்து பவுலிங் செய்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ பதிவிட்டு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரித் பும்ரா. ஆனால் இவர் சுழற்பந்து வீச்சிலும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக பவுலிங் செய்துள்ளார். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளேவை அப்படியே அச்சு அசலாக காப்பியடித்து அவர் பவுலிங் செய்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று வரும் பும்ரா, பயிற்சியின்போது சுமார் 6 பவுலர்களைப் போல பவுலிங் செய்து அசத்தினார். இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜஸ்பிரித் பும்ரா ஷார்ப் பவுன்சர் மற்றும் மிரட்டலான யார்க்கர்களை வீசி நாம் அனைவரும் பார்த்துள்ளோம். ஆனால் இதற்கு முன்பாக அவர் இப்படி ஒரு பவுலிங் செய்ததே இல்லை. ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை அப்படியே காப்பியடித்து அச்சுஅசலாக வெளிப்படுத்தியுள்ளார்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது.

இதற்கிடையில் கும்பளே தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார் பும்ரா. கடந்த 2016 ஜூன் மாதம் இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்ட போது, இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகளில் பங்கேற்று இருந்தார் பும்ரா. மேலும் நான்கு ஒருநாள் போட்டிகளில் அப்போது பங்கேற்றிருந்தார் பும்ரா. தற்போது இந்திய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகிய போதும் பும்ரா – கும்ப்ளே இடையேயான ஒற்றுமை விலகவில்லை.

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்து அசத்தினார் பும்ரா. கும்ப்ளே மூன்று போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார். இவரின் இந்த சாதனையை மெல்போர்ன் டெஸ்டின் நான்காவது நாள் போட்டியில் சமன் செய்து அசத்தினார் பும்ரா.

கடந்த செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 6 வித்தியாசமான பவுலர்களைப் போல பும்ரா பவுலிங் செய்த வீடியோவை பகிர்ந்து இருந்தது. அந்த வீடியோவில் அவர் பவுலிங் செய்த விதத்தை வைத்து பார்க்கும்போது இந்தியாவின் முனாஃப் படேல், ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் மற்றும் மிட்செல் ஸ்டார்க். இந்தியாவின் கேதர் ஜாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால். கடைசியாக அந்த பட்டியலில் கும்ப்ளே போன்ற பவுலிங் செய்ததும் இடம் பெற்றிருந்தது. இதற்கிடையில் பும்ரா தற்போது கும்ப்ளே போல பவுலிங் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0