வறண்ட மாநிலத்தில் இத்தனை நாளா… நக்கல் மீம்ஸுக்கு ரிப்ளை பண்ண இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!

27 February 2021, 7:46 pm
ravi shastri - updatenews360
Quick Share

தன்னைக் கேலி செய்து வெளியிடப்பட்ட நகைச்சுவையான மீம்ஸ் ஒன்றுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பதிலளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டி வெறும் இரண்டு நாட்களுக்குள்ளேயே முடிவடைந்தது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. குஜராத்தில் மாநிலத்தில் முற்றிலுமாக மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்ததால் எஞ்சியுள்ள மூன்று நாட்களில் வீரர்கள் பயிற்சி செய்வதற்கு மற்ற செயல்களிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் மீம்ஸ் ஒன்று வைரலாக பரவியது. அதில் இந்திய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியைக் கேலி செய்யும் விதமாக அது அமைந்தது. அந்த மீம்ஸில் ரவி சாஸ்திரியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஒன்றுமில்லாத வறட்சியான மாநிலத்தில் ஐந்து நாட்கள் நான் இருப்பேன் என்று நினைத்தீர்களா? என்று ரவி சாஸ்திரி கற்பனையாக நினைத்துக் கொள்வது போல அந்த மீம்ஸ் சித்தரிக்கப்பட்டிருந்தது. குஜராத்தில் தடைசெய்யப்பட்ட மதுபானத்தைக் குறிக்கும் விதமாக வறட்சி என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரபலமான எழுத்தாளரான சோபா தே ரவிசாஸ்திரி குறித்த இந்த மீம்ஸை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரவி சாஸ்திரி ஆச்சரியம் அளிக்கும் விதமாக அதற்குப் பதிலும் அளித்திருந்தார். அதில், “இந்த வேடிக்கையை அதிகம் நேசிக்கிறேன். இந்த கடினமான நேரங்களில் கொஞ்சம் புன்னகை வரவழைப்பது மகிழ்ச்சியாகவே உள்ளது” என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் இந்த மீம்ஸை உருவாக்கியவர் அடுத்த டெஸ்ட் போட்டியும் இதே அகமதாபாத்தில் தான் நடக்க உள்ளது என்பதை மறந்து இந்த மீம்ஸ் பகிர்ந்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்குகிறது. ரவி சாஸ்திரி விளையாடும் நாட்களில் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர். இவர் 80 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 3830 ரன்கள் மற்றும் 151 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல 150 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிசாஸ்திரி 129 விக்கெட்டுகள் மற்றும் 3108 ரன்களை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் ரவிசாஸ்திரி டிவி வர்ணனையாளராக இருந்தார்.

Views: - 17

0

0