30 வருஷமா இந்திய டீமின் கோட்டையாகத் திகழும் சென்னை: இங்கிலாந்து எதிராக இதான் சாதனை!

3 February 2021, 6:40 pm
indian team practise - updatenews360
Quick Share

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது இதற்கிடையே சென்னையில் இதற்கு முன்பாக இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் கொடுத்த வரலாறு பற்றிப் பார்க்கலாம்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இதன் முதல் போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. இரண்டாவது போட்டியும் சென்னையில் நடக்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சென்னையில் இந்திய அணி படைத்துள்ள சாதனை குறித்துப் பார்க்கலாம். கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். இதனால், இந்திய அணி ரசிகர்கள் போட்டியை நேரில் காண ஆர்வமாக இருந்தனர். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மைதானம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது எனலாம். இந்தியா இங்கிலாந்து அணிகள் இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தமாக 9 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. 1934 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. இதுவரை பங்கேற்றுள்ள 9 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளில் வென்றுள்ளது. இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் வென்றுள்ளது.

ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசியாக இங்கிலாந்து அணி இந்திய அணியைச் சென்னை மைதானத்தில் கடந்த 1985 வீழ்த்தியுள்ளது. இதுவரை முதல் டெஸ்ட் போட்டியாக இந்த மைதானத்தில் நடந்த எந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது கிடையாது. கடந்த 2016ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 4-0 என இழந்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைச் சென்னை மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளில் வீழ்த்தியதே இல்லை. இந்த முறையும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவு தான்.

Views: - 21

0

0