வெளியானது ஹர்திக் பாண்டியாவின் ஜெர்சி எண் ‘228’ ரகசியம்…! இதுதான் காரணமா.. என குஷியில் ரசிகர்கள்..!

22 May 2020, 6:00 pm
Hardik pandiya - updatenews360
Quick Share

பொதுவாக, கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது ஜெர்சியின் பின்புறம், தங்களுக்கு ராசியான அல்லது பிடித்தமான எண்ணை போட்டுக் கொள்வார்கள். அவர்கள் பதிவிடும் எண்ணிற்கு பின்னணியில் பல்வேறு ரகசியங்களும், காரணங்களும் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, தனது ஜெர்சியில் 228 என்ற எண் இடம்பெற்றிருந்தது. இதற்கு காரணம் என்ன..? என்று ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியது.

அதில், புள்ளியில் நிபுணர் மோகன்தாஸ் மேனன் அளித்து பதிலில், “கடந்த 2009-ம் ஆண்டு 16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்ச்சன்ட் டிராபி கிரிக்கெட் தொடரில் பரோடா அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களத்தில் 8 மணிநேரம் விளையாடி, 391 பந்துகளில் 228 ரன்கள் குவித்தார். தனது வாழ்நாளில் பாண்டியா அடித்துள்ள ஒரே இட்டை சதமும் அதுதான். இதனால்,தான் பாண்டியா அவரது ஜெர்சியில் இந்த எண்ணை போட்டுள்ளார்,” எனக் கூறினார்.

ஆரம்ப காலத்தில் 228 எண்ணை தனது ஜெர்சியில் போட்டிருந்து ஹர்திக் பாண்ட்யா, தற்போது 33 என்ற நம்பரை போட்டுள்ளார்.

Leave a Reply