ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி : யூரோ கால்பந்து தொடரால் வந்த விபரீதம்..!!

15 July 2021, 12:50 pm
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியா அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடர் ஆக.,4ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் டர்ஹமில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவருக்கு மீண்டும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது. மற்றொரு வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெகட்டிவ் என வந்த வீரரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு வரும் 17ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பண்ட் என தெரிய வந்துள்ளது. இவர் அண்மையில் இங்கிலாந்து – ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கால்பந்து ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார். இதன்மூலம் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Views: - 296

0

0

Leave a Reply