சாத்தான்குளம் சம்பவத்திற்கு எதிராக அனைவரும் குரல் எழுப்பவும் : இந்திய கிரிக்கெட் வீரர் வலியுறுத்தல்

26 June 2020, 4:45 pm
dhawan - updatenews360
Quick Share

கோவில்பட்டி கிளை சிறையில் காவலில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் வலியுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் சிறையில் இருந்த விசாரணைக் கைதிகளான தந்தை, மகனுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு, #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

Leave a Reply