இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்குத் திருமணம்!

28 January 2021, 12:27 pm
vijay shankar - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், வைசாலி விஸ்வேஸ்வரன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகப் பங்கேற்கும் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர். இவர் இலங்கை அணிக்கு எதிராகக் கடந்த 2018இல் கொழும்புவில் நடந்த போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் சுமார் ஒரு ஆண்டுக்குப் பின் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் களமிறாங்கினார். தொடர்ந்து 2019 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்) தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்தார். இந்நிலையில் சமீபத்தில் 2021 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தக்கவைக்கப்படும் வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி இவரைத் தக்கவைத்துக்கொண்டது.

இந்நிலையில் விஜய் சங்கர், வைசாலி விஸ்வேஸ்வரன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதை சன்ரைசர்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக 2019 இல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது மிகப்பெரும் சல சலப்பை ஏற்படுத்தியது. அம்பதி ராயுடு இதன் விளைவாக ஓய்வு வரை சென்றார். மேலும் இவர் தேர்வுசெய்யப்படத் தேர்வுக்குழுவினர் தெரிவித்த முப்பரிமாண கருத்தையும் ராயுடு 3-டி எனக் கிண்டல் செய்யும் விதமாகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

கடந்தாண்டு யுஏஇயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விஜய் சங்கர் 7 போட்டிகளில் பங்கேற்று 101 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 9 போட்டிகளில் பங்கேற்றுள்ள விஜய் சங்கர் 324 ரன்கள் அடித்துள்ளார். பவுலிங்கை பொறுத்தவரையில் 9 விக்கெட் சாய்த்துள்ளார்.

Views: - 0

0

0