டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி..!!

Author: Aarthi
26 July 2021, 10:51 am
Quick Share

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

2020 ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி நேற்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் தோல்வியை தழுவியது. பேட்மிட்டன் சிந்து, பாக்சிங் மேரி கோம், பாய்மர படகு போட்டி நேத்ரா குமணன், டேபிள் டென்னிஸ் மானிக பத்ரா ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கை கொடுத்தனர்.

ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இந்நிலையில் இன்று வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு கலந்து கொண்டது. அட்டானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் 16 அணிகள் சுற்றில் கலந்து கொண்டது. இதில் வெற்றிபெறும் அணி எட்டு அணிகள் கொண்ட காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றது. கஜகஸ்தான் அணியை இந்திய வில்வித்தை ஆண்கள் படை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டில் இந்திய ஆண்கள் படை 55 புள்ளிகள் பெற்றது. கஜகஸ்தான் அணி வெறும் 54 புள்ளிகள் பெற்றது. இதனால் முதல் சுற்றிலேயே இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்றது.

அடுத்த சுற்று

அதன்பின் இரண்டாவது சுற்றிலும் இந்தியா 52-50 என்ற மதிப்பெண்களை பெற்றதால், மொத்தமாக 4-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. இதில் மீண்டு வந்த கஜகஸ்தான் அணி மூன்றாவது சுற்றில் 57 புள்ளிகள் பெற்றது. இந்தியா 56 புள்ளிகள் மட்டுமே பெற்றது.

எப்படி

இதன்பின் நான்காவது சுற்று வரை நீண்ட ஆட்டத்தில் இந்தியா கடைசி சுற்றல் 55-54 எடுத்தது. இதனால் 6-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் இந்தியா – தென் கொரியா அணியுடன் மோத உள்ளது.

Views: - 345

0

0