ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி : 41 வருடங்களுக்கு பிறகு வெண்கலம் வென்று அசத்தல்!!

Author: Udayachandran
5 August 2021, 9:06 am
Hockey India- Updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் இந்தியா – ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் 2-ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது.

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்யவில்லை. ஆனால் அதன் பின்பு ஜெர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது.

இதையடுத்து இந்திய வீரர்கள் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினார். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3-ஆவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜெர்மனி 3 கோல்கள் என சமநிலையில் இருந்தன.

இரண்டாம் பாதியில் இந்திய வீரர் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை பதிவு செய்தார். இதனையடுத்து ஜெர்மனி வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்து. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5-ஆவது கோல் அடித்தார்.

ஆனாலும் மனம் தளராத ஜெர்மனி அணியினர் இரண்டாவது பாதியில் மற்றொரு 4 ஆவது கோலை பதிவு செய்தனர். இந்தியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி ஆட்ட நேர முடிவு வரை ஜெர்மனியின் கோல் போடும் முயற்சியை தடுத்தனர்.

ஆட்டம் முடிய வெறும் 6 விநாடிகள் இருந்த நிலையில் ஜெர்மனிக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் அந்த வாய்ப்பை கச்சிதமாக முறியடித்தனர். இறுதி நேர முடிவில் 5-4 என்ற கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்று. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா பதக்கத்தை வசப்படுத்தியுள்ளது.

Views: - 411

2

0