இந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு!!

Author: Udayachandran
27 July 2021, 4:32 pm
Krunal Pandya -Updatenews360
Quick Share

இந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடர 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தற்போது டி20 போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என்னும் கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற விருந்தது. ஆனால் இந்திய வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்த காரணத்தினால் இந்தத் தொடரே திட்டமிடப்பட்ட தேதியில் இருந்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 314

0

0