ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : ஜடேஜாவுக்கு வாய்ப்பு..!!

7 May 2021, 6:48 pm
indian test team - updatenews360
Quick Share

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்., தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு பிறகு அங்கேயே தங்கியிருக்கும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஆக., 4ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணியில் அஜின்க்ய ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ஆர். அஸ்வின், ஜடேஜே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

விக்கெட் கீப்பர்களான கேஎல் ராகுல் மற்றும் சஹா ஆகியோர் உடல்தகுதியை நிரூபித்த பிறகு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 219

0

0