இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : ஐபிஎல்லில் ஜொலித்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

11 June 2021, 10:22 am
dhawan - updatenews360
Quick Share

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தவான் தலைமை தாங்க உள்ளார்.

ஜுலை 13ம் தேதி ஒரு நாள் போட்டி தொடரும், ஜுலை 21 தேதி டி20 தொடரும் தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் கொழும்பு மைதானத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

இந்த நிலையில், தவான் தலைமையிலான இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தவான் (கேப்டன்), தேவதத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதீஷ் ராணா, இசான் கிஷன், சஞ்சு சாம்சன், சாஹல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்கரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Views: - 205

0

0

Leave a Reply