பிஞ்ச் அதிரடியால் பஞ்சு போல பறந்த இந்திய வீரர்களின் பந்து : முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி!!
27 November 2020, 8:38 pmஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.
இந்த நிலையில் இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் தனது அதிரடியான ஆட்டத்தால்114 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 105 ரன்களும் எடுத்து அணிக்கு முக்கிய பலமாக இருந்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன் எடுக்காவிட்டாலும் அணியின் ஸ்கோர் 50 ஓவரில் 374 ரன்களாக உயர்ந்தது.
375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொட இந்திய அணி வீரர்கள் களமிறங்னிர். முதலில் களமிறங்கிய மயங்க் அகர்வால் சொற்ப ரன்னில் வெளியேற, மறுமுனையில் இருந்த ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் அவருக்கு துணையாக ஆட வந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். பின்னர் வந்த பாண்டியா நிதானமாக தவானுடன் இணைந்து ஆடினார்.
இருப்பினும் தவான் 74 ரன்களில் வெளியேற, மறுமுனையில் இருந்த பாண்டியாவும் 90 ரன்களில் வெளியேறினார். இதற்கடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
0
0