ஜனவரி 27 இல் சென்னை வரும் இந்திய அணி வீரர்கள்!

23 January 2021, 8:52 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், வரும் 27ஆம் தேதி சென்னை வரவுள்ளனர்.

இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதன் முதல் போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் 27ஆம் தேதி சென்னை வரவுள்ளனர்.

இந்த டெஸ்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் பேட்ச் பேட்ச்சாக வெவ்வேறு நகரத்தில் இருந்து வருகை தரவுள்ளனர். தொடர்ந்து பயோ பபுள் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் 27 ஆம் தேதி முதல் செல்லவுள்ளனர். தொடர்ந்து 1 வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பின் இங்கிலாந்து அணி வீரர்களும் ஜனவரி 27ஆம் தேதி இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்தியா வரவுள்ள ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், துவக்க வீரர் பேர்ன்ஸ் ஆகியோர் முன்னதாக இந்தியா வந்தடைவார்கள் எனத் தெரிகிறது.

இரு அணி வீரர்களும் லீலா பேலஸில் தங்கவு ள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ் போட்டி பிப்ரவரி 5 – 9 வரை, இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 – 17 வரை சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து அஹமதாபத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 24 – 28 மற்றும் மார் 4 – 8 வரையும் நடக்கவுள்ளது.

இந்த தொடருக்குப் பின் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் அஹமதாபாத்தில் நடக்கிறது. பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நடக்கவுள்ளது.

Views: - 6

0

0