இலங்கையில் கிரிக்கெட் தொடரை விளையாட தயார் : பிசிசிஐக்கு வழிவிடுமா மத்திய அரசு…?

17 May 2020, 3:00 pm
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் கடந்த இரு மாதங்களில் நடக்கவிருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நடக்கவிருந்த ஐபிஎல்லும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதனிடையே, ஐசிசி போட்டி அட்டவணையின்படி இந்திய கிரிக்கெட் அணி ஜுலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா தாக்கத்தால், இந்த தொடர் குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவை மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.

இருப்பினும், இந்தத் தொடர் குறித்து பிசிசிஐக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதல், தனிமைப்படுத்துதலில் வழிமுறைகள், வீரர்களின் கட்டுப்பாடுகள் குறித்து அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் விளக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்திற்கு பதில் அளித்துள்ள பிசிசிஐ, இலங்கை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு அனுமதிக்கும்பட்சத்தில் இந்தத் தொடரில் விளையாடுவோம் என தெரிவித்துள்ளது. இதனால், நீண்ட காலமாக விளையாட்டு போட்டிகள் நடக்காத நிலையில், இந்தத் தொடருக்கு மத்திய அரசு அனுமதியளிக்குமா..? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply