சாதனைகளுக்கு சொந்தக்காரர் ‘ரன் மெஷின்’ : விராட் கோலிக்கு இன்று 32வது பிறந்த நாள்.!!

5 November 2020, 11:19 am
virat kohli - updatenews360
Quick Share

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கபில்தேவ், ஸ்ரீநாத், கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி உள்ளிட்டோரின் வரிசையில் இடம்பிடித்துள்ளவர் விராட் கோலி. நுணுக்கமான ஆட்ட முறைகளினாலும், களத்தில் ஆக்ரோஷமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாலும் இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தன்னை சீண்டும் வீரர்களுக்கு ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுப்பதுடன், களத்தில் அவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை ஆராவாரப்படுத்துவதாக இருக்கும்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்ததன் மூலம் அடையாளம் கட்டபட்டவர் கோலி. பிறகு, 2008ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் களம் கண்டார். அப்போது, யாருக்கும் தெரியாது இவர்தான் இந்திய அணியை ஆளப் போகிறவர் என்று. 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு தனி முத்திரையை தேடித் தந்தவர் என பொதுவாக பல்வேறு சாதனைகளை கையில் வைத்துள்ளார். அதிரடி ரன்குவிப்பினால், ரன் மெஷின் என்ற செல்லப்பெயரும் அவருக்குண்டு.

அதுமட்டுமல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 911 புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். இது ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் பெறும் அதிகபட்ச புள்ளியாகும். மேலும், இலக்கை நோக்கி விளையாடும் போது அதிக சதங்களை அடித்தவர், விரைந்து 5000 ரன்களை கடந்தவர் உள்ளிட்ட சாதனைகளையுடன் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை முறியடிப்பதற்கான வாய்ப்பு கோலிக்கு மட்டும் இருப்பதே, கிரிக்கெட் உலகில் அவர் கோலோச்சியிருப்பதை உணர்த்துகிறது. இவர் பிசிசிஐயின் சிறந்த வீரருக்கான விருதை 5 முறையும், மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளையும் வென்றுள்ளார்.

india kohli - updatenews360

கிரிக்கெட் வீரர்களுக்கு ஃபிட்னஸ் எவ்வளவு முக்கியம் என்பதற்கு, பிற அணி வீரர்களும் கைகாட்டும் வீரராக கோலி திகழ்ந்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது, தந்தை என்ற அந்தஸ்துடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை விளையாடி வரும் கோலி, அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பையை வெல்வார் என்று நம்பப்படுகிறது.

இப்படி, ஆட்டத்திலும், வெகுளித்தனத்திலும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள விராட் கோலி, பல இளம் வீரர்களுக்கு முன்னுதாராணமாக இருந்து வருகிறார். இன்று அவருக்கு 32வது பிறந்த நாள்…

Views: - 59

0

0

1 thought on “சாதனைகளுக்கு சொந்தக்காரர் ‘ரன் மெஷின்’ : விராட் கோலிக்கு இன்று 32வது பிறந்த நாள்.!!

Comments are closed.