வந்தனாவின் ஹாட்ரிக் கோல்… தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி..!! காலிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல்..!!!

Author: Babu
31 July 2021, 11:01 am
womens hockey - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஹாக்கி போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளன. இந்திய அணி தனது முதல் மூன்று போட்டிகளில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், இந்திய மகளிர் அணி, கடந்த போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் 6 அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில், முதல் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். குரூப் ஏ-வில் அயர்லாந்து 4வது இடத்திலும், இந்திய அணி 5வது இடத்திலும் இருந்தது.

இந்த நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இன்று விளையாடியது. அதில், வந்தனாவின் ஹாட்ரிக் கோலின் உதவியுடன் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இருப்பினும், இன்று நடக்கும் பிரிட்டன் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில், பிரிட்டன் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி காலிறுதிக்கு பெறும்.

Views: - 231

0

0