ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு LOVE PROPOSE செய்த இந்திய இளைஞர் : இந்திய ஆஸ்திரேலிய போட்டியில் சுவாரஸ்யம்!!
29 November 2020, 4:36 pmஇந்திய ஆஸ்திரேலியாவுக்கு இடையே 2வது ஒரு நாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் காதலை தெரிவித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி, ,3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி சிட்டினியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்க செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், பின்ச், மார்னஸ், மற்றும் மேக்ஸ்வெல் நால்வரும் அரை சதமடிக்க, ஸிமித் அபாரமாக ஆடி இரண்டாவது போட்டியிலும் சதமடித்தார்.
இதையடுத்து 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. போட்டி நடைபெற் றபோது இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்ல, இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன் காதல் ஜோடி கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
0
0