டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் தீபிகா குமாரி..!!

Author: Aarthi Sivakumar
30 July 2021, 11:18 am
Quick Share

டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றியில் ரஷ்ய வீராங்கனையை ஹெசினா புரோவாவை 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் வில்வித்தை ‘ரீகர்வ்’ பிரிவு பெண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை ஹெசினா புரோவாவை எதிர் கொண்டார்.

இதில் முதல், மூன்றாவது சுற்றை தீபிகாவும், இரண்டாவது சுற்றை ஹெசினாவும் வென்றனர். நான்காவது சுற்றில் இருவரும் 26 புள்ளிகள் பெற்று சமன் செய்தனர். 5வது சுற்றில் ஹெசினா வெற்றி பெற்றார்.

இதனையடுத்து ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் ஹெசினாவை வீழ்த்திய தீபிகா, 6-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி.

Views: - 290

0

0