இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது..? குவாலிபயர் 1-ல் மும்பை – டெல்லி அணிகள் மோதல்..!!!

5 November 2020, 6:14 pm
Quick Share

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதலாவது குவாலிபயர் சுற்றில் மும்பை – டெல்லி அணிகள் இனறு மோதுகின்றன.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை (18 புள்ளிகள்), டெல்லி (16 புள்ளிகள்), ஐதராபாத் (14 புள்ளிகள்), பெங்களூரூ (14 புள்ளிகள்) ஆகிய அணிகள் பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றுள்ளன. கொல்கத்தா, பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

இந்த நிலையில், துபாயில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் போட்டியில் 9 வெற்றியுடன் பேட்டிங், பவுலிங்கில் பலத்துடன் கம்பீரமாக முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல, தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த டெல்லி அணி, பெங்களூரூவை தோற்கடித்து பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது. எனவே, வெற்றி பாதைக்கு திரும்பிய நம்பிக்கையில் டெல்லி அணி உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். பனிப்பொழிவு இருப்பதால், டாஸ் ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும். கடைசியாக நடந்த 9 ஆட்டங்களில் 8-ல் இரண்டாவது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 22

0

0