ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன..!

6 September 2020, 5:17 pm
Quick Share

பல்வேறு கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துபாயில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. அபுதாபியில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 46 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் நடைபெறும்.

அக்டோபர் 13-ல் சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 17ஆம் தேதி டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதுகின்ற. அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இறுதி போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0