செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை..! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபில் சீசன் 13..! அறிவிப்பு வெளியீடு..!

2 August 2020, 10:06 pm
IPL_UpdateNews360
Quick Share

இன்று கூடிய இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) நிர்வாக குழு, செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் தொடரின் 13’வது பதிப்பைத் தொடங்க இந்திய அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும்.

கூட்டத்தின் போது, கவுன்சில் ஒவ்வொரு உரிமையாளர்களுக்கும் 24 வீரர்களின் வரம்பை நிர்ணயித்தது. அதே நேரத்தில் போட்டிக்கு கொரோனா மாற்று வீரர்களுக்கும் ஒப்புதல் அளித்தது. போட்டிகளில் 10 டபுள் ஹெடர் ஆட்டங்கள் இருக்கும். டபுள் ஹெடர் ஆட்டம் என்பது ஒரு அணி, ஒரே நாளில் இரண்டு ஆட்டங்களில் விளையாடுவதாகும். மாலை நேரப் போட்டிகள் இந்திய நேரப்படி 7:30 மணிக்கு தொடங்கும்.

மற்றொரு முக்கிய முடிவாக, ஐபிஎல் நிர்வாக குழு, மகளிர் ஐபிஎல் போட்டிகளைத் தொடங்கவும் ஒப்புதல் அளித்தது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் இன்று நடந்த கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை காரணமாக இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட ஐபிஎல், உலகெங்கிலும் உள்ள நுட்பமான சுகாதார பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு வரம்பற்ற கொரோனா மாற்றங்களை அனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது.

“உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சகம் இன்னும் ஒரு வாரத்திற்குள் எங்களுக்கு தேவையான ஒப்புதல்களை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இறுதிப் போட்டி நவம்பர் 10’ஆம் தேதி தீபாவளி வாரத்திற்குள் நுழைவதால் ஒளிபரப்பாளர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.” என்று ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.

கொரோனா குறித்த அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், இதனால் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று ஐபிஎல் தெரிவித்துள்ளது.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு மருத்துவ வசதியை உருவாக்குவது குறித்து துபாயை அடிப்படையாகக் கொண்ட குழுவிலிருந்து பிசிசிஐ விளக்கக்காட்சிகளைப் பெற்றுள்ளது. மேலும் இதற்காக டாடா குழுமத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0