போராடி மும்பையை தோற்கடித்தது டெல்லி… பிளே ஆஃப்பிற்கு செல்வதில் ரோகித் சர்மா படைக்கு சிக்கல்…!!!

Author: Babu Lakshmanan
2 October 2021, 7:56 pm
rohit MI - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி போராடி தோற்கடித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற பிற்பகல் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, சூர்ய குமார் யாதவ் 33 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் ஆவேஷ் கான், அக்ஷர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், நோர்ட்ஜே, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

எளிய இலக்காக இருந்தாலும், 2வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணியின் வீரர்கள் தடுமாறினர். விக்கெட்டுக்கள் ஒருபுறம் சரிந்தாலும், ஸ்ரேயாஷ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கடைசி 6 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது, க்ரூணால் பாண்டிய வீசிய முதல் பந்தை, டெல்லி வீரர் அஸ்வின் சிக்சருக்கு பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்தார். இதன்லும், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் மும்பைக்கான பிளே ஆஃப் வாய்ப்பு சற்று சிக்கலாகியுள்ளது.

டெல்லி அணி 9வது வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலேயே நீடிக்கிறது.

Views: - 498

0

0