முதலிடத்தில் நீடிக்கும் பெங்களுரு.. கடைசியில் தவிக்கும் சென்னை: ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்!

16 April 2021, 10:54 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 7 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் நம்பர் -1 இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதில் நேற்று வரை 7 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் நீடிக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றதையடுத்து டெல்லி அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது என்பதைப் பார்க்கலாம். இந்நிலையில் பெங்களூரு அணி நம்பர்-1 இடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் அணி 3-வது இடத்திலும், டெல்லி அணி 4-வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி ஆறாவது இடத்தில் உள்ளது. ஒரு வெற்றி கூட பெறாத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழாவது மற்றும் கடைசி இடத்தில் உள்ளன.

இதேபோல அதிக ரன்கள் விளாசிய வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ரானாவிடம் உள்ளது. இவர் இரண்டு போட்டியில் சேர்த்து 137 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் (123) இரண்டாவது இடத்திலும், மணீஷ் பாண்டே (99) மூன்றாவது இடத்திலும், கிளன் மேக்ஸ்வெல் (98) நான்காவது இடத்திலும், ஷிகர் தவான் (94) 5வது இடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களுக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப் ராயல் சாலஞச்ர்ஸ் பெங்களூரு வீரர் ஹர்ஷால் படேல் (7 விக்கெட்) வசம் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணி வீரரான ஆண்ரே ரசல் (6) பட்டியல் உள்ளார். மூன்றாவது இடத்தில் டெல்லி வீரர் அவேஷ் கான் (5) நான்காவது இடத்தில் ரசித் கான் (4), ஐந்தாவது இடத்தில் கிறிஸ் வோக்ஸ் (4) ஆகியோர் உள்ளனர்.

Views: - 33

0

0