பிப்.,18ம் தேதி சென்னையில் ஐபிஎல் ஏலம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

27 January 2021, 4:05 pm
Imran-tahir-IPL - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் முக்கிய வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு கடந்த 20ம் தேதியோடு முடிவடைந்தது. சரியாக சோபிக்காத வீரர்களை வெளியே விட்டு விட்டு, புதிய வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அணிகளுக்கு கிடைத்துள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரையில் முரளி விஜய், ஹர்பஜன்சிங், கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா, மோனு சிங் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். தொடக்க வீரர் வாட்சன் ஓய்வு பெற்று விட்டார்.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த முறை ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள் இந்தியாவிலேயே நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ கூறி வருகிறது.

எதிர்வரும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சிறப்பாக நடத்தப்பட்டு விட்டாலே, ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்திவிடலாம் என்றே தெரிகிறது.

Views: - 0

0

0