தனிமைப்படுத்தல் இல்லை… இதை மட்டும் சமர்பிக்கணும்: ஐபிஎல் மினி ஏலம் விதிமுறைகள் என்ன?

28 January 2021, 3:29 pm
Quick Share

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மினி ஏலம் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த ஏலத்திற்கான விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் சென்னையில் வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இதில் 61 வீரர்கள் ஏலம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடத்த உள்ளது. இதற்கிடையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடர் பாதுகாப்பு வளையத்திற்குள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் வெளிநாட்டு ஓனர்களும் மற்றும் சில நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளையும் அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு ஓனர்கள் வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை எடுத்து நெகட்டிவ் என்ற சர்டிபிகேட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதிகள் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல அவர்கள் இந்தியா வந்த பிறகு அவர்கள் தங்க உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் அவர்களுக்கும் மற்றும் ஓட்டல் ஊழியர்களுக்கும் வைரஸ் பரிசோதனை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏலம் நடத்தப்பட உள்ள அரங்கில் ஒரு அணி சார்பாக அதிகபட்சமாக 13 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அந்த 13 பேரிலும் வெறும் 8 பேர் மட்டும் டேபிளில் அமர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பேரும் கேலரியில் அமர வைக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏலத்தில் பங்கேற்பவர்களின் பட்டியலை முன்னதாகவே அறிவிக்கவேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. வீரர்களை ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் பதிவு முறை வரும் பிப்ரவரி 11ம் தேதி மாலை 5 மணி வரை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு மாற்றப்படும் வீரர்களுக்கான கடைசி நாள் பிப்ரவரி 20ல் முடிந்துவிடும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இருந்தாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பேக்கப் ஆக இருக்கும் என்றும் தகவல்கள்

Views: - 0

0

0