சென்னை அணியில் இரு மாற்றங்கள் : தோனியின் யுக்தி பழிக்குமா..?

19 October 2020, 7:11 pm
ms-dhoni-csk - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37வது லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரையில் இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடி, அதில் 3 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே, எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில், சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணிக்கு, பிளே ஆப் வாய்ப்பு தகர்ந்து போய்விடும்.

இந்த நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் காயமடைந்த பிராவோவிற்கு பதிலாக ஹசில்வுட்டும், கரண் சர்மாவுக்கு பதிலாக பியூஷ் சாவ்லாவும் களமிறக்கப்படுகின்றனர்.

அதேபோல, ராஜஸ்தானில் உனத்கட்டிற்கு பதிலாக அன்கித் ராஜ்புத் சேர்க்கப்பட்டுள்ளார்.

Views: - 16

0

0