தமிழகத்தில் தொடங்கியது IPL Fever : சென்னை வந்தார் ‘தல’… ‘சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு’…!

14 August 2020, 7:57 pm
dhoni- updatenews360
Quick Share

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்.,19ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் பயிற்சியில் ஈடுபட முடியும். இதையடுத்து, அனைத்து அணிகளும் பயிற்சி முகாமுக்காக ஆயத்தமாகி வருகின்றன.

சென்னை அணியை பொறுத்தவரையில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக, கேப்டன் தோனி ராஞ்சியில் நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இதையடுத்து, பயிற்சி முகாமிற்காக தனிவிமானம் மூலம் இன்று அவர் சென்னை வந்தடைந்தார். 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். பயிற்சிக்கு பிறகு 21ம் தேதி சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்படுகின்றனர்.