சிஎஸ்கேவுக்கு குட்-பை சொல்லும் ஜடேஜா..? இனி ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டன் அவதாரம்.. ரசிகர்கள் ஷாக்..!!!

Author: Babu Lakshmanan
26 October 2021, 2:11 pm
jaddu - udpatenews360
Quick Share

ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் விளையாடி வரும் நிலையில், மேலும் புதிதாக சேர்க்கப்படும் இரண்டு அணிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் தலைசிறந்த முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல், ராயல் சேலஞ்சர் பெங்களூரூ, கிங்ஸ் லெவன் பஞ்சாப் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

IPL - updatenews360

அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகள் இணைக்கப்படுவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம், இதற்கான ஏலத்தை நேற்று நடத்தியது. அணியின் அடிப்படை விலையாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அதானி குழுமம், ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், ஜிண்டால் ஸ்டீல், இங்கிலாந்து கால்பந்து கிளப்பான மான்செடர் யுனைடெட், கோடாக் குரூப், அரோபின்டோ மருந்து நிறுவனம் ஆகியவை புதிய அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டின. அதேபோல, பாலிவுட் தம்பதியான ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனேவும் ஒரு அணியை வாங்க விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.

மேலும், அகமதபாத், லக்னோ, கவுகாத்தி, இந்தூர், கட்டாக், தரம்சாலா உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏதேனும் இரு நகரங்களை மையமாகக் கொண்டு இரு அணிகள் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று நடந்த ஏலத்தின் மூலம், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அணிகள் அமைய இருப்பது உறுதியாகிவிட்டது. அதாவது, லக்னோ அணியை (ரூ.7,090 கோடிக்கு) சஞ்சிவ் கோயின்காயின் ஆர்பிஎஸ்ஜி (RPSG) குழுமமும், அகமதபாத்தை (ரூ. 5,625 கோடிக்கு) மையமாகக் கொண்டு உருவாகும் அணியை சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரையில் பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட விட்டாலும் கூட, இரு அணிகள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சேர்க்கப்படுவது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணிகளின் கேப்டன் பதவிக்காக, ரெய்னா, ஜடேஜா, வார்னர், ஸ்மித் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

jadeja - updatenews360

வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் அணிகள் முற்றிலும் கலைக்கப்பட்டு, பெரிய ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு அணியும் 2 அல்லது 3 வீரர்களே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால், பெரும்பாலான அணிகளின் முக்கிய வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.

சென்னையைப் பொறுத்தவரையில் தோனி தக்க வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து, ரெய்னா, டூபிளசிஸ், ருத்துராஜ், ஜடேஜா ஆகியோரில் யார் தக்க வைக்கப்படுவார்கள் என்பது பெரியக் கேள்விக்குறிதான். இருப்பினும், ஜடேஜா சென்னை அணியில் நீடிப்பார் என்றே சொல்லப்படுகிறது. அதேவேளையில், ரெய்னாவும் சென்னையில் நீடிப்பாரா..? என்பது தெரியவில்லை. எல்லாம் காலம்தான் அதனை தீர்மானிக்கும். வார்னரை பொறுத்தவரையில் ஐதராபாத் அணி அவரை கழற்றி விட்டு விட்டது. எனவே, அவர் ஏதேனும் ஒரு அணிக்கு கேப்டனாவது உறுதியாகியுள்ளது.

அதேபோல, டெல்லி அணியின் முக்கிய வீரராக ஸ்டீவ் ஸ்மீத் இருந்து வருகிறார். இளம் கேப்டனான பண்ட்டின் தலைமையின் கீழ் விளையாடுவது சிறப்பாக உள்ளதாக அவர் கூறியிருந்தார். அவருக்கும் புதிய அணியின் கேப்டன் வாய்ப்பு பிரகாசமே.

Views: - 798

0

0