எஞ்சிய ஐபிஎல் தொடரில் ஆஸி., வீரர்களும் சந்தேகமா..? : விளக்கமளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!!

31 May 2021, 6:13 pm
ipl 1 - updatenews360
Quick Share

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்., 9ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள், பலத்த மருத்துவ பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வந்தது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில், டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என முடிவு செய்த பிசிசிஐ, எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் ஐக்கிய அரபு அமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 15ம் தேதி முதல் ஒருமாத காலத்திற்குள் போட்டிகளை நடத்தவும் முடிவு செய்திருந்தது.

இதனிடையே, ஐபிஎல் போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அனைத்து நாடுகளின் வீரர்களும் முழுமையாக பங்கேற்பார்களா..? என்பது சந்தேகமாகவே உள்ளது.

ஏற்கனவே, இங்கிலாந்து வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கடினம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பதிலளித்திருந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை செயல் அதிகாரிக நிக் ஹாக்லி பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி ரத்தான பிறகு மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள் தற்போதுதான் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளனர். பின்னர், அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராக வேண்டும். ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா..? என்பது குறித்து பிறகுதான் தெரிய வரும், எனக் கூறினார்.

Views: - 382

0

0