22 பந்துகளில் அரைசதம்…!! டிவில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூரூ அணிக்கு 6வது வெற்றி..!

17 October 2020, 7:47 pm
de-villliers - rcb - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தினால், பெங்களூரூ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு உத்தப்பா அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். வெறும் 22 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிந்தார்.

இவரைத் தொடர்ந்து, ஸ்மித் அரைசதம் கைகொடுக்க ரன் விகிதம் அதிகரித்தது. அவர் 57 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், பின்னர் வந்த பட்லர் (24), திவேதியா (19) ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. பெங்களூரூ அணி தரப்பில் மோரிஸ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரூ அணிக்கு படிக்கல் (35), பின்ச் (14), விராட் கோலி (43) விக்கெட்டை இழந்தனர். இருப்பினும், தனி ஒருவனாக டிவில்லியர்ஸ் மட்டும் போராடினார். உனாத்கட் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து பறக்கவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் டிவில்லியர்ஸ். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 22 பந்துகளில் 55 ரன்கள் குவித்து, வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதன்மூலம் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரூ 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.

Views: - 22

0

0