ஐ.பி.எல்.லில் இருந்து முக்கிய வீரர்கள் திடீர் விலகல் : டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு பின்னடைவு..!

By: Babu
5 October 2020, 6:07 pm
srh 1 - updatenews360
Quick Share

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கிய ஐபிஎல கிரிக்கெட் தொடர், தற்போது 19வது போட்டியை எட்டியுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் பெங்களூரூ – டெல்லி அணிகள் மோதுகின்றன. இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன.

ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலிலும் டெல்லி அணி 2வது இடத்திலும், பெங்களூரூ 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த நிலையில், 4வது வெற்றிக்காக களமிறங்கும் இரு அணிகளும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருவதால், இந்தப் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இந்த நிலையில், டெல்லி அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு தொடரில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதேபோல, சென்னைக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்த ஐதராபாத் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், ரன்களை கட்டுப்படுத்துவதில் திறமையாக செயல்பட்டுள்ளார். புவனேஸ்வர்குமாரின் விலகல் ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 47

0

0