பெங்களூரு அணியை பந்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…! 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

Author: Udhayakumar Raman
20 September 2021, 11:10 pm
Quick Share

கொல்கத்தா 10 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கிய நிலையில், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து இருவரும் விக்கெட்டை இழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சச்சின் பேபி, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பெங்களூரு அணி இறுதியில் 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இதனால் கொல்கத்தா அணிக்கு 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய வந்த சுப்மான் கில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 82 ரன் இருக்கும்போது சுப்மான் கில் சிக்ஸர் அடிக்க முயன்றபோது முகமது சிராஜிடம் கேட்சை கொடுத்து 48 ரன்னில் வெளியேறினார். இறுதியாக கொல்கத்தா 10 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது கொல்கத்தா அணி 7 இடத்தில் இருந்து 6 புள்ளிகள் பெற்று 5 வது இடத்த்திற்கு வந்துள்ளது.

Views: - 360

0

0