சிக்சர் மழையை பொழிந்த கேஎல் ராகுல்… வாரி வழங்கிய சென்னை பவுலர்கள் : சென்னையை எளிதில் தோற்கடித்த பஞ்சாப்…!!

Author: Babu Lakshmanan
7 October 2021, 7:28 pm
kl-rahul-updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று பிற்பகல் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெயிக்வாட் (12), மொயின் அலி (0), உத்தப்பா (2), ராயுடு (4), தோனி (12) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். மறுமுனையில் டூபிளசிஸ் மட்டுமே சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்த அவர் 76 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப்பிற்கு அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடினார். இதனால், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கடைசியில் 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 98 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

சென்னையை வீழ்த்தி பஞ்சாப் அணி இமாலய வெற்றி பெற்றிருந்தாலும், பிளே ஆஃப்பிற்கான வாய்ப்பு நூலிழை அளவிலேயே உள்ளது. பிற அணிகளின் முடிவுகளை பொறுத்து அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

Views: - 801

0

0