முந்தப் போவது யார்…?? எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத் – பெங்களூரூ அணிகள் இன்று மோதல்..!!

6 November 2020, 1:20 pm
rcb - srh - devilliers - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் – பெங்களூரூ அணிகள் இன்று மோதுகின்றன.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை, டெல்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ அணிகள் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளன. நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்றில் டெல்லி, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில், 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது.

இந்த நிலையில், இன்று நடக்கும் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) சுற்றில் பெங்களூரூ மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபயர் 2-ல் டெல்லியுடன் மோதும். தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஐதராபாத் அணி, பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பை சிதைத்து விட்டு, தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கடந்த போட்டியில் வலுவான மும்பை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் அணி, அதே நம்பிக்கையுடன் இன்று பெங்களூரூவை எதிர்கொள்கிறது.

அதேவேளையில், கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள பெங்களுரூ அணி, முதல்முறையாக கோப்பையை வெல்லுவதற்கான முதல்படியை எடுத்து வைக்கும் நோக்கில் இந்த ஆட்டத்தில் விளையாடும். இரு அணிகளும் சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

Views: - 20

0

0