கோப்பையை ஜெயிக்காட்டியும் நீங்க இந்த விஷயத்தில் சாம்பியன்தாங்க : பெங்களூரூவை புகழும் ரசிகர்கள்..!!!

Author: Babu Lakshmanan
16 September 2021, 1:58 pm
Quick Share

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்., 9ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகள், பலத்த மருத்துவ பாதுகாப்புடன் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது.

29 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி இருந்தது. இதைத் தொடர்ந்து, எஞ்சிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.,19ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, அனைத்து அணிகளும் அங்கு முன்கூட்டியே சென்று, தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஐபிஎல் அணிகள் பற்றி அப்டேட்டுகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

rcb jersey -- updatenews360

இந்த நிலையில், ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், பெங்களூரூ அணியின் புதிய வடிவிலான ஜெர்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் முகக் கவசம் போன்ற வடிவமைப்புகள் அந்த ஜெர்சியில் இடம்பெற்றுள்ளன. தடுப்பூசி போடுங்கள், முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் உள்ளிட்ட கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருப்பதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Views: - 338

0

0