ஐபிஎல் தொடரில் மாற்றம் : ஒத்தி வைக்கப்படும் இறுதிப் போட்டி..?

30 July 2020, 7:19 pm
ipl - updatenews360
Quick Share

கடந்த மே மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், கொரோனா வைரஸ் காரணமாக வரும் செப்.,19ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ம் தேதி இறுதி போட்டி நடக்கும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நவ.,14ம் தேதி இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. எனவே, பண்டிகை வாரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பிய, ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம், பிசிசிஐயிடம் கோரிக்கை ஒன்றை வைத்தது. அதாவது, நவ., 8ம் தேதி நடைபெறுவதாக இருந்த இறுதிப் போட்டியை, 10 தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது.

இதனால் நவ., 10-ந்தேதி செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியை நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை கோரிக்கையை ஏற்று இறுதி போட்டிக்கான அட்டவணையை மாற்றம் செய்தால், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றிக்கிழமை அல்லாத தினத்தில் இறுதிப் போட்டி நடைபெறுவது முதல்முறையாகும். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 2-ந்தேதி நடக்கும் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

1 thought on “ஐபிஎல் தொடரில் மாற்றம் : ஒத்தி வைக்கப்படும் இறுதிப் போட்டி..?

Comments are closed.