ஐபிஎல் தொடரில் வெறும் பணம் தான்…அதுக்கு பாக் தொடர் எவ்வளவோ மேல்: சர்ச்சையை கிளப்பிய ஸ்டெயின்!

2 March 2021, 7:21 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை விடப் பாகிஸ்தான் உள்ளூர் தொடரே மேலானது எனத் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் அளித்துள்ள பதில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஐபிஎல் ஏலத்திலிருந்து தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் விலகினார். இந்நிலையில் ஏன் ஐபிஎல் பங்கேற்கவில்லை என்பதற்குக்  காரணம் தெரிவித்த ஸ்டெயின், ஐபிஎல் தொடரில் பணம் தான் பெரிதாகப் பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டேயின் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார். வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர்  ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.  இந்தாண்டு  ஏலத்திற்கு முன்பாக பெங்களூரு அணி ஸ்டெயினை கழட்டி விட்டது. இதையடுத்து இவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். 


பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தற்போது பங்கேற்று வரும் ஸ்டெயின், ஐபிஎல் தொடரில் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஆட்டத்தை விடப்  பணம் குறித்த பேச்சு அதிகமாக உள்ளதாக ஸ்டெயின் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஸ்டெய்ன் கூறுகையில், “நான் கொஞ்சம் விலகியிருக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு வீரராகப் பிற லீக் தொடர்களில் பங்கேற்பது மிகவும் கௌவரப்படுத்துவதாக உணர்ந்தேன். ஐபிஎல் தொடருக்குச் செல்லும் போது மிகப்பெரிய அணிகளும், பல முக்கிய பெயர்களும், வீரர்கள்  ஈட்டும் மிகப்பெரிய தொகை போன்ற விஷயங்கள் தான் பெரிதாகப்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்திற்கும் மேல் கிரிக்கெட் என்பதே மறக்கப்படுகிறது” என்றார். 

Views: - 13

0

0