ஐபிஎல்லில் சேரும் 2 புதிய அணிகள்… லக்னோ, அகமதாபாத் கன்ஃபார்ம்…? யார் ஓனர் தெரியுமா..? கசிந்த தகவல்கள்…!!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 7:02 pm
IPL - updatenews360
Quick Share

ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் விளையாடி வரும் நிலையில், மேலும் புதிதாக சேர்க்கப்படும் இரண்டு அணிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் தலைசிறந்த முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல், ராயல் சேலஞ்சர் பெங்களூரூ, கிங்ஸ் லெவன் பஞ்சாப் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகள் இணைக்கப்படுவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம், இதற்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள், விண்ணப்பங்களை பெற்ற நிலையில், அணியின் அடிப்படை விலையாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம், ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், ஜிண்டால் ஸ்டீல், இங்கிலாந்து கால்பந்து கிளப்பான மான்செடர் யுனைடெட், கோடாக் குரூப், அரோபின்டோ மருந்து நிறுவனம் ஆகியவை புதிய அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல, பாலிவுட் தம்பதியான ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனேவும் ஒரு அணியை வாங்க விருப்பம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், அகமதபாத், லக்னோ, கவுகாத்தி, இந்தூர், கட்டாக், தரம்சாலா உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏதேனும் இரு நகரங்களை மையமாகக் கொண்டு இரு அணிகள் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அணிகள் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, லக்னோ அணியை (ரூ.7,090 கோடி) சஞ்சிவ் கோயின்காயின் ஆர்பிஎஸ்ஜி (RPSG) குழுமமும் , அகமதபாத்தை (ரூ. 5,625 கோடிக்கு) மையமாகக் கொண்டு உருவாகும் அணியை சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் கசிந்து வருகின்றன.

இது தொடர்பாக விரைவில் பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 597

0

0