5 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை : இது எல்லாம் ஐ.பி.எல். விதிமுறைகள்..!

5 August 2020, 5:07 pm
IPL csk practice - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் செப்., மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் ஆயத்தமாகி வரும் நிலையில், போட்டி அட்டவணையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பிசிசிஐ வகுத்து வருகிறது.

இந்த நிலையில், வீரர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் முக்கிய அம்சங்களை பிசிசிஐ நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தங்களது அணிகளுடன் இணைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இருமுறை கொரோனா பரிசோதனை செய்தல் வேண்டும். அணியுடன் இணைந்த பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

ஒருவேளை வீரர்கள், பயிற்சியாளர்களில் யாருக்கேனும் கொரோனா உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார். இதையடுத்து, இருமுறை நடத்தப்படும் பரிசோதனைகளில், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, அந்த வீரர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்.

அமீரகம் சென்றடையும் வீரர்கள், உதவியாளர்கள் மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த சமயங்களில் 3 முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னர், மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள்.

போட்டி தொடங்கிய பிறகும், ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0