ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டுக்கான ஸ்பான்ஷர் இவங்களா..!! அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ..!
6 August 2020, 3:53 pmகடந்த 2018ம் ஆண்டு முதல் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ IPL விளையாட்டின் ஸ்பான்சராக இருந்து வருகிறது. ஆனால் நிறுவனம் இந்த ஆண்டு T20 போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்வதில் இருந்து விலகியுள்ளது. லடாக் பிரச்சனையால் இந்தியாவுக்குள் அதிகரித்து வரும் சீன எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு சீன நிறுவனமான விவோ ஸ்பான்சராக இருப்பதற்கு எதிராக அதிகரித்து வரும் கண்டங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் IPL போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் போட்டிகள் நடைபெறுகின்றன. எனவே, புதிய ஸ்பான்ஷர்களை தேர்வு செய்யும் பணியில் பி.சி.சி.ஐ. இறங்கியிருந்தது.
இந்த நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஸ்பான்சார்களாக பைஜுஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பைஜு நிறுவனம் ஆன்லைன் கல்வித்துறையிலும், அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.