பிளே ஆஃப்பிற்கு முதல் அணியாக முன்னேற மும்பை – பெங்களூரூ இன்று பலப்பரீட்சை : சாதிப்பாரா கோலி..?

28 October 2020, 5:08 pm
kohli - pollard - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்டது என்றே சொல்லலாம். இன்னும் சில லீக் போட்டிகளே உள்ள நிலையில், இதுவரையில் எந்த அணியும் பிளே ஆஃப் வாய்ப்பிற்கு தகுதி பெறவில்லை. முதல் 3 இடங்களில் மும்பை, டெல்லி, பெங்களூரூ ஆகிய அணிகள் இருந்தாலும், இன்னும் பிளே ஆஃப்பிற்கு தகுதியாகவில்லை. அதேவேளையில், 4வது இடத்திற்கான வாய்ப்பில் கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு வாய்ப்புள்ளது. இதனால், இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் டாப் இரு இடங்களை பிடித்துள்ள மும்பை – பெங்களூரூ அணிகள், இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெறும்.

மும்பை அணி ஏற்கனவே சூப்பர் ஓவரில் பெங்களூரூவிடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளுமே கடைசியாக ஆடிய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருப்பதால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.