ஐ.பி.எல். கிரிக்கெட் : முதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் கொல்கத்தா – ஐதராபாத் அணிகள்..!!

26 September 2020, 2:14 pm
srh - kkr - updatenews360
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் பலப்பழீட்சை நடத்துகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றன.

இரு அணிகளும் ஏற்கனவே தலா ஒரு போட்டிகளில் விளையாடிய நிலையில், இரு அணிகளும தோல்வியை சந்தித்துள்ளன. எனவே, முதல் வெற்றிக்காக இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதுவரை இரு அணிகளும் 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிய நிலையில், கொல்கத்தா 10 போட்டியிலும், ஐதராபாத் 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.