ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் கொல்கத்தாவை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்..!

30 September 2020, 2:29 pm
KKR-vs-RR - updatenews360
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட்தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இதுவரை தோல்வியை சந்திக்காத ராஜஸ்தான் அணி, கொல்கத்தாவை இன்று சந்திக்கிறது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை வலுவான அணியாக திகழ்ந்து வருவது ராஜஸ்தான். ஸ்மித் தலைமையிலான இந்த அணி, இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சென்னைக்கு எதிராக 216 ரன்கள் குவித்தும், பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை ‘சேசிங்’ செய்தும் அசத்தியது.

இந்த நிலையில், இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது ராஜஸ்தான். கடந்த இரு போட்டிகளில் வெற்றி பெற்ற நம்பிக்கையோடு, இந்தப் போட்டியில் விளையாட இருக்கிறது.

அதேவேளையில், முதல் போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்த கொல்கத்தா அணி, ஐதராபாத்தை தோற்கடித்து மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இந்த வெற்றியோடு, ராஜஸ்தானையும் வீழ்த்தி, வெற்றி பயணத்தை தொடர அந்த அணி முனைப்பு காட்டும்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம திறமையுடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

Views: - 10

0

0