ஐபிஎல் தொடரில் இன்று வெளியேறப்போவது யார்..? பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை..!!

30 October 2020, 12:35 pm
kxip vs rr - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய வாழ்வா..? சாவா..? ஆட்டத்தில் பஞ்சாப் -ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருந்த பஞ்சாப் அணி, கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதன்மூலம், 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கும் முன்னேறியது. அந்த அணி, அதிரடி மன்னன் கெயிலின் வருகைக்கு பிறகு மேலும் பலமாகியுள்ளது. ஏற்கனவே, கேப்டன் லோகேஷ் ராகுல், மயாங்க் அகர்வால், மன்தீப்சிங், பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். பந்து வீச்சைப் பொறுத்தவரையில், முகமது ஷமி, பிஸ்னோய் ஆகியோரும் வலு சேர்க்கின்றனர்.

எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற பஞ்சாப் அணி போராடும்.

அதேவேளையில், 12 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணிக்கும் எஞ்சிய இரு போட்டிகள் மிகவும் முக்கியமானதாகும். அப்படி, வெற்றி பெற்றாலும், பிற அணிகளின் முடிவு சாதாகமாக அமைந்தால் மட்டுமே பிளே ஆஃப்பிற்கு முன்னேற முடியும். எனவே, பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் களமிறங்கும்.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 3 பந்து மீதம் வைத்து விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.