இரு இளம் கேப்டன்கள்.. இன்றைய போட்டியில் நேருக்கு நேர் மோதல் : ரேஸில் முந்தப் போவது யார்..?

15 April 2021, 5:57 pm
pant - samson - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் டெல்லி அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. பண்ட் தலைமையிலான இந்த அணியில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவானின் நல்ல ஃபார்ம், அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. வேகப்பந்து புயல் காஜிசோ ரபடா தனிமைப்படுத்துதல் நாட்கள் முடிந்து திரும்புவது அந்த அணியின் பந்து வீச்சு பலத்தை அதிகரிக்கும்.

அதேவேளையில், 222 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திச் சென்று வெற்றியை கோட்டை விட்டாலும், 210 ரன்களை கடந்தது அந்த அணிக்கு கூடுதல் தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கையில் ஆபரேஷன் செய்து இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆடமுடியாத நிலையில், எலும்பு முறிவு காரணமாக பென் ஸ்டோக்ஸின் விலகலும் போட்டியில் இருந்து விலகி இருப்பது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், 2 வது வெற்றிக்காக டெல்லியும்… முதல் வெற்றியை பெறுவதற்காக ராஜஸ்தான் அணியும் மல்லுக்கட்டும் என்பதால், இந்தப் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Views: - 22

0

0