ஐபிஎல் கிரிக்கெட் : 4வது வெற்றி யாருக்கு.. பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை…!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 7:44 am
rr - PK - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் எதிர்த்து விளையாஇருக்கிறது.

இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் 7 ஆட்டங்களில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அதேபோல, பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

டேவிட் மலான், ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் விலகியதை தொடர்ந்து பேட்ஸ்மேன் மார்க்ராம், சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித், நாதன் எல்லிஸ் ஆகியோர் புதிய வரவாக அணியினருடன் இணைந்துள்ளனர்.

இரு அணிகளும் சில புதிய வீரர்களுடன் களம் இறங்கும் என்பதால், இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஏற்கனவே இதில் நடந்த முந்தைய போட்டியில், பஞ்சாப் நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.

Views: - 379

0

0